முக்கிய ஆட்டம்.. சென்னை அணியில் இரண்டு அதிரடி மாற்றங்கள்...!

முக்கிய ஆட்டம்.. சென்னை அணியில் இரண்டு அதிரடி மாற்றங்கள்...!
முக்கிய ஆட்டம்.. சென்னை அணியில் இரண்டு அதிரடி மாற்றங்கள்...!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே நடைபெறுகிறது. அபுதாபி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி ப்ளே ஆஃப் சுற்றில் பங்கேற்கும் தகுதியை தக்க வைக்கும் என்பதால் இன்று ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிராவோ மற்றும் கர்ரன் ஷர்மா ஆகியோர் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக ஜாஸ் ஹஸ்ல்வுட் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உனாட்கட் அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அங்கிட் ராஜ்பூட் இடம்பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com