நீயா? நானா? போட்டியில் CSK Vs RR: ஆடும் லெவன் கணிப்பு இதுதான்.!

நீயா? நானா? போட்டியில் CSK Vs RR: ஆடும் லெவன் கணிப்பு இதுதான்.!

நீயா? நானா? போட்டியில் CSK Vs RR: ஆடும் லெவன் கணிப்பு இதுதான்.!
Published on

பிளே ஆஃப்-க்குச் செல்ல வேண்டுமெனில் இனி களமிறங்கும் அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்.

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் நடப்பு சீசனில் தலா 9 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளன. இந்நிலையில், இன்று அபுதாபி சேக் ஜயத் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 இரு அணிகளும் மோத உள்ளன. இன்றைய ஆட்டத்தின் இரு தரப்பிலும் ஆடும் லெவனை புதியதலைமுறை கணித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: சாம் கர்ரன், டூ பிளஸி, சேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, தோனி(கே), ரவீந்திர ஜடேஜா, பியூஸ் சாவ்லா, தீபக் சாஹர், சர்துல் தாக்கூர், கரன் சர்மா, லுங்கி நெகிடி.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித்(கே), ஜோஸ் பட்லர், ரியன் பரக், ராகுல் தெவாட்டியா, ஸ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், வருண் ஆரோன், கார்த்திக் தியாகி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com