மூன்றாவது அரைசதம்.. தொடரும் புதுமாப்பிள்ளை கான்வேயின் அதிரடி - 208 ரன்கள் குவித்த சிஎஸ்கே!

மூன்றாவது அரைசதம்.. தொடரும் புதுமாப்பிள்ளை கான்வேயின் அதிரடி - 208 ரன்கள் குவித்த சிஎஸ்கே!

மூன்றாவது அரைசதம்.. தொடரும் புதுமாப்பிள்ளை கான்வேயின் அதிரடி - 208 ரன்கள் குவித்த சிஎஸ்கே!
Published on

தொடரும் புதுமாப்பிள்ளை கான்வேயின் அதிரடி - டெல்லி அணிக்கு எதிராக 208 ரன்கள் குவித்தது சிஎஸ்கே!

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கான்வே, கெய்க்வாட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சில பந்துகளை தடுப்பாட்டம் விளையாடிய பின்னர் கான்வே அதிரடியில் இறங்கி சிக்ஸர், பவுண்டரிகளை விளாசினார். ஆனால், கெய்க்வாட் நிதான ஆட்டத்தையே தொடர்ந்தார். இருப்பினும் இந்த ஜோடி நல்ல தொடக்கத்தை கொடுத்தது.

35 பந்துகளில் 50 ரன்களை எட்டிய இந்த ஜோடி, 10 ஓவர்களில் 100 ரன்களை குவித்தது. இந்த வேகத்தில் சென்றால் சென்னை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ரன் எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. சரியான நேரத்தில் 41 (33) ரன்களில் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷிவம் துபே அதிரடி காட்டினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கான்வே 49 பந்துகளில் 5 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் குவித்து அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த உடன் சென்னை அணியில் விக்கெட் வீழ்ந்த வண்ணம் இருந்து.

துபே 19 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த அம்பத்தி ராயுடு 5 ரன்னில் நடையைக் கட்டினார். தோனி ஒரு புறம் சிக்ஸர் பறக்கவிட மொயின் அலி 9 ரன்னிலும், உத்தப்பா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. தோனி 8 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டெல்லி அணியில் அகமது சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட் வீழ்த்தினார். நோர்ஜ் 3 விக்கெட் வீழ்த்திய போதும் 42 ரன்கள் விட்டுக் கொடுத்தார். 209 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாடி வருகிறது. நல்ல துவக்கம் இல்லை என்ற குறையை கான்வே - ருதுராஜ் ஜோடி கடந்த சில போட்டிகளில் தீர்த்து வருகிறது. கான்வே நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்றாவது அரைசதத்தை பதிவு செய்துள்ளார். சென்னை அணி நான்காவது முறை 200 ரன்களை இந்த சீசனில் கடந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com