ஐபிஎல் 2021 : மும்பை வந்தடைந்தார் சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் ரெய்னா!
எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாக உள்ள ஐபிஎல் 2021 சீசனில் விளையாடும் வகையில் மும்பை வந்தடைந்தார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா. கடந்த சீசனில் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடாமல் தொடரில் இருந்து விலகிய நிலையில் இந்த சீசனில் விளையாட ஆயத்தமாகி வருகிறார் ரெய்னா. இவரை சென்னை ரசிகர்கள் ‘சின்ன தல’ என அன்புடன் அழைப்பது உண்டு. அதனை ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக போஸ்ட் செய்து வெளிப்படுத்தியுள்ளார்.
கொரோனா பரவலின் தாக்கத்தினால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் அவர். அதன் பிறகு விரைவில் தோனி மற்றும் சகாக்களுடன் அவர் இணைவார்.
சென்னை அணி இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளை மும்பையில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
தோனி சென்னையில் பயிற்சி மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சீசனில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் முதல் சுற்றோடு வெளியேறி இருந்தது.