125 ரன்கள் மட்டுமே எடுத்த சிஎஸ்கே : ரசிகர்கள் ஏமாற்றம்..!

125 ரன்கள் மட்டுமே எடுத்த சிஎஸ்கே : ரசிகர்கள் ஏமாற்றம்..!
125 ரன்கள் மட்டுமே எடுத்த சிஎஸ்கே : ரசிகர்கள் ஏமாற்றம்..!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஐபிஎல் தொடரின் 37-வது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே அபுதாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சென்னையில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சாம் கர்ரன் மற்றும் டூ பிளசிஸ் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 10 (9) ரன்களில் டூ பிளசிஸ் அவுட் ஆக, பின்னர் வந்த ஷேன் வாட்சன் 2 பவுண்டரிகளை விளாசிவிட்டு 8 (3) ரன்களில் நடையைக்கட்டினார்.

நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கர்ரன் 25 பந்துகளுக்கு 22 ரன்களை எடுத்துவிட்டு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அம்பத்தி ராயுடு 13 (19) ரன்களில் ஆட்டமிழக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின்னர் ஜோடி சேர்ந்த தோனி மற்றும் ஜடேஜா அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சென்னையின் ஸ்கோர் 100 ரன்களை கடக்க, 28 (28) ரன்களை அடித்த தோனி எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.

கடைசி வரை போராடிய ஜடேஜா 30 பந்துகளில் 35 ரன்களை சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் சென்னை 125 ரன்களை மட்டுமே எடுத்தனர். எளிமையான இந்த ஸ்கோரை ராஜஸ்தான் எளிதில் அடிக்க வாய்ப்புள்ளதால் போட்டியை கண்டுகொண்டிருக்கும் சென்னை ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com