“லட்டு” கேட்சுகளை தொடர்ந்து மிஸ் செய்யும் சென்னை வீரர்கள்! சிஎஸ்கேவுக்கு என்னதான் ஆச்சு?

“லட்டு” கேட்சுகளை தொடர்ந்து மிஸ் செய்யும் சென்னை வீரர்கள்! சிஎஸ்கேவுக்கு என்னதான் ஆச்சு?
“லட்டு” கேட்சுகளை தொடர்ந்து மிஸ் செய்யும் சென்னை வீரர்கள்! சிஎஸ்கேவுக்கு என்னதான் ஆச்சு?

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை- மும்பை இடையிலான வாழ்வா? சாவா? மோதலில் சென்னையின் நம்பிக்கை நட்சத்திரங்கள் தொடர்ந்து கேட்சுகளை மிஸ் செய்வது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டி இன்று நடைபெற்று வருகிறது. நடப்பு தொடரில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை நடைபெற்றுள்ள 6 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதே வேளையில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியோ, பங்கேற்ற 6 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இக்கட்டான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா பவுலிங்கை தேர்வு செய்தார்.

முகேஷ் சவுத்ரி வீசிய முதல் ஓவரின் 2வது பந்தில் சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார் ரோகித் ஷர்மா. அடுத்ததாக இஷான் கிஷன் முதல் ஓவரின் 5வது பந்தில் கோல்டன் டக் அவுட் ஆகி நடையை கட்டினார். இதன் காரணமாக 2 ரன்களை சேர்ப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து மும்பை தடுமாறியது. அடுத்ததாக சாண்ட்னர் வீசிய பந்தில் சூர்யகுமார் யாதவை ஸ்டம்பிங் செய்ய தவறினார் தோனி.

அதே சாண்ட்னர் வீசிய பந்தில் ப்ரெவிஸ் அடித்த பந்தை கேட்ச் பிடிக்கும் வாய்ப்பையும் தவற விட்டார் கேப்டன் ஜடேஜா. ஆனால் இதை தனது அற்புதமான பந்துவீச்சால் ஈடுகட்டிவிட்டார் முகேஷ் சவுத்ரி. அவரது பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார் ப்ரெவிஸ். இதே வேளையில் பிராவோவும் தன் பங்குக்கு ஒரு கேட்சை மிஸ் செய்ய ரசிகர்கள் “இது நம்ம சிஎஸ்கே தானா?” என்று டிவிட்டரில் பதிவிடத் துவங்கினர்.

அடுத்ததாக சூர்யகுமார் அடித்த பந்தை ஜடேஜா மிஸ் செய்து அதிர்ச்சி அளித்தார். கேப்டனான ஜடேஜாவுக்கு இன்றைய போட்டியில் இது 2வது கேட்ச் ட்ராப். அதுவும் கைக்கே வந்த லட்டு கேட்ச். ஆனால் சாண்ட்னர் சூர்யாவை வெளியேற்ற அந்த தவறும் சரி செய்யப்பட்டது. தற்போது 18 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை குவித்துள்ளது மும்பை.

அதேபோல், 19வது ஓவரில் ஷிவம் துபே கைக்கு வந்த கேட்சை கோட்டைவிட்டார். பந்தை பிடிக்க முற்பட்ட போது அது அவரது நெஞ்சில் பட்டு கீழே விழுந்தது. 20ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது மும்பை அணி. மும்பை அணியில் திலக் வர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் உனாட்கண்ட் 9 பந்துகளில் 19 ரன்கள் விளாசினார்.

இந்தப் போட்டியில் ஒருவேளை சிஎஸ்கே தோல்வி அடைந்தால் அதற்கு ஒரே காரணம் அவர்கள் கோட்டை விட்ட கேட்சுகளாக தான் இருக்கும். அந்த கேட்சுகளை பிடித்திருந்தால் மும்பை அணி 100 ரன்களுக்குள் சுருண்டு இருக்கும். இதில் வேடிக்கை என்றால் சிறந்த பீல்டர்களாக அறியப்படும் ஜடேஜா இரண்டு கேட்சுகளை கோட்டைவிட்டதுதான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com