தமிழகத்தில்தான் மும்பை அணிக்கு ரசிகர்கள் அதிகம் - காரணம் என்ன ?

தமிழகத்தில்தான் மும்பை அணிக்கு ரசிகர்கள் அதிகம் - காரணம் என்ன ?

தமிழகத்தில்தான் மும்பை அணிக்கு ரசிகர்கள் அதிகம் - காரணம் என்ன ?
Published on

விஜய் - அஜித் ரசிகர்களைப் போல சென்னை - மும்பை ரசிகர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் படையெடுக்க தொடங்கினர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஒருவேளை சென்னை அணியுடன் இறுதிப் போட்டியில் வேறு எந்த அணியாவது இருந்திருந்தால் இவ்வளவு பரபரப்பு இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். சென்னை - மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி என்பதால்தான் இவ்வளவு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. டெல்லி அணியை வீழ்த்தி சென்னை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதுமே சமூக வலைத்தளங்கள் சூடாகிவிட்டன. 

விஜய் - அஜித் ரசிகர்களைப் போல சென்னை - மும்பை ரசிகர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் படையெடுக்க தொடங்கினர். இரண்டு நாட்களாக மீம்ஸ்களை அள்ளி தெளித்து வருகின்றனர். ஒருவரை ஒருவர் நக்கல், கிண்டல் செய்து மீம்ஸ்களை பறக்கவிடுகிறனர். ரசிகர்களின் படையெடுப்பால் சமூக வலைத்தளங்களே சூடாகிவிட்டது. 

இதில், குறிப்பாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மும்பை அணிக்கு ஆதரவாக தமிழகத்திலிருந்து அதிக ரசிகர்கள் களமிறங்குகிறார்கள். தமிழில் பதிவிடப்படும் மீம்ஸ்களில் மும்பை அணிக்கு ஆதரவான மீம்ஸ்களையும் பெரிய அளவில் பார்க்க முடிகிறது. ‘என்ன நீங்க தமிழ்நாட்டிலிருந்து கொண்டு மும்பை அணிக்கு ஆதரவு தருகிறீர்கள்’ என்று சிலர் வம்புக்கு இழுக்கின்றனர்.

சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் பிளே ஆஃப் போட்டியில் சென்னை அணியை மும்பை அணி வீழ்த்தியது. அப்போது, போட்டி முடிந்ததும் வெளியே வந்த ரசிகர்களிடம் சில ஊடகங்கள் பேட்டி எடுத்தன. அப்போது, மும்பை அணிக்கு ஆதரவாக அவ்வளவு ரசிகர்கள் உணர்ச்சி பொங்க பேசினர். 

சென்னை அணியின் ரசிகர் பட்டாளத்துக்கு முக்கியமான காரணம் மற்ற வீரர்களைக் காட்டிலும் தோனிக்கே அந்தப் பெருமை சேரும். ஆனால், மும்பை அணிக்கு தமிழகத்தில் இவ்வளவு ரசிகர்கள் இருக்க மிக முக்கியமான காரணமாக இருப்பவர் நம்ம சச்சின் டெண்டுல்கர்தான். ரோகித் சர்மாவை குறைத்து மதிப்பிட முடியாது என்றாலும் சச்சின் ரசிகர் பட்டாளும் அப்படியே மும்பை இண்டியன்ஸ் பக்கம் திரும்பிவிட்டனர். 2013 வரை சச்சின் மும்பை அணிக்காக விளையாடினார். இதில், 2010ம் ஆண்டு 618 ரன்களும், 2011ம் ஆண்டு 553 ரன்களும் குவித்தார்.

சச்சின் தற்போது மும்பை அணியின் ஆலோசகராக உள்ளார். போட்டி நடைபெறும் போது மைதானங்களில் அவர் காட்சி அளிப்பார். அது ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும். தமிழகத்தில் சச்சினின் பிரியர்கள் அதிகம் என்பது மும்பை இண்டியன்ஸுக்கு இங்குள்ள ஆதரவு மூலம் தெரிய வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com