ஐபிஎல் மெகா ஏலம்: ஷிவம் துபேவுக்கு 'ஜாக்பாட்' ஏலம் எடுத்த சிஎஸ்கே
ஷிவம் துபேவை ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வந்த இந்திய வீரர் ஷிவம் துபேவின் அடிப்படை விலை ரூ.50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது. ஆரம்பம் முதலே ஷிவம் துபேவை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்வம் காட்டி வந்தது. இறுதியாக அவரை ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்திருக்கிறது சிஎஸ்கே அணி.
முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஓடியன் ஸ்மித்தை எடுக்க கடும் போட்டி நிலவியது. இறுதியில் அவரை ரூ. 6 கோடிக்கு ஏலம் பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. அதேபோல் தென்னாப்பிரிக்கா வீரர் மார்கோ ஜான்செனையும் ரூ.4.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது பஞ்சாப் அணி. விஜய் சங்கரை ரூ.1.4 கோடி குஜராத் அணி ஏலம் எடுத்தது.
இதையும் படிக்க: ஐபிஎல் ஏலம்: லியாம் லிவிங்ஸ்டோனுக்கு கடும் போட்டி: பெரும் தொகைக்கு வசப்படுத்திய பஞ்சாப்

