CSK vs KKR : டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு! ஆடும் லெவன் விவரம்!

CSK vs KKR : டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு! ஆடும் லெவன் விவரம்!
CSK vs KKR : டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு! ஆடும் லெவன் விவரம்!

அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 38-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன், பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 

இரு அணிகளும் இந்த சீசனின் இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரண்டு போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றுள்ளன. சென்னை, மும்பை மற்றும் பெங்களூர் அணிகளை வீழ்த்தி உள்ளது. அதே அணிகளை அமீரகத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது பாதியில் கொல்கத்தா அணியும் வீழ்த்தி உள்ளது. இந்நிலையில் தான் இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் விளையாடுகின்றன. 

இந்த சீசனில் மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை, கொல்கத்தாவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இதுவரை ஐபிஎல் அரங்கில் 26 போட்டிகளில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் சென்னை 16 போட்டிகளிலும், கொல்கத்தா 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. 

சென்னை இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விடும். இரு அணிகளும் சம பலம் கொண்ட அணிகளாக இருப்பதால் இந்த ஆட்டத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்நோக்கி உள்ளனர். புள்ளிப்பட்டியலில் சென்னை இரண்டாவது இடத்திலும், கொல்கத்தா நான்காவது இடத்திலும் உள்ளன. 

ஆடும் லெவன் விவரம்... 

சென்னை சூப்பர் கிங்ஸ்!

ருதுராஜ் கெய்க்வாட், டூப்ளசிஸ், மொயின் அலி, ராயுடு, சுரேஷ் ரெய்னா, தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசல்வுட். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

சுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயோன் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், லோக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com