விளையாட்டு
ப்ரீமியர் பேட்மிண்டன் லீக்: சிந்து - சாய்னா மோதல்
ப்ரீமியர் பேட்மிண்டன் லீக்: சிந்து - சாய்னா மோதல்
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ப்ரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டி கவுகாத்தியில் நாளை தொடங்குகிறது.
மூன்றாவது ப்ரீமியர் லீக் பேட்மிண்டன் தொடர் இந்தியாவில் நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் சிந்து உள்ளிட்டோர் அடங்கிய சென்னை ஸ்மாஷர்ஸ் அணி, சாய்னா நேவால் இடம் பெற்றுள்ள லக்னோ அவாதே வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. முதல் போட்டி கவுகாத்தில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. நாளை முதல் ஜனவரி 14 ஆம் தேதி வரை நடைபெறும் பேட்மிண்டன் தொடரில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, லக்னோ உள்ளிட்ட 8 நகரங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.