40 வயது கிராண்ட் மாஸ்டரை வீழ்த்தி‌ய சென்னை பள்ளி மாண‌வன்!

40 வயது கிராண்ட் மாஸ்டரை வீழ்த்தி‌ய சென்னை பள்ளி மாண‌வன்!

40 வயது கிராண்ட் மாஸ்டரை வீழ்த்தி‌ய சென்னை பள்ளி மாண‌வன்!
Published on

சர்வதேச‌ அளவிலான செஸ் போட்டியில் ஜார்ஜியாவின் கிராண்ட் மாஸ்டர் மிக்கெய்லை வீழ்த்தி சென்னையைச்‌ சேர்ந்த பள்ளி‌ மாணவன் ஹர்சவர்தன் அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

12-ஆவது சென்னை ஓபன் கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.‌ இதன் 4‌-ஆவது‌ சுற்று போட்டியில், சென்னை வேலம்மாள் பள்ளியைச் சேர்ந்த மாணவன் ஹர்‌சவர்தன், ஜார்ஜியாவின்‌ 4‌‌0-வயது கிராண்ட் மாஸ்டர் மிக்கெய்லை எதிர்கொண்டார்.

43 நகர்வுகள் செய்யப்பட்ட இப்போட்டியில் ஹர்சவர்தன் வெற்றி பெற்று கிராண்ட் மாஸ்டர் மிக்கெய்லுக்கு அதிர்ச்சியை பரிசளித்தார். இந்த வெற்றியின் மூ‌லம் 4 புள்ளிகளுடன் என்.ஆர்.விசாக், ஜோஸ் எடுராடோ‌ உள்ளிட்ட‌ கிராண்ட் மாஸ்டர்கள் உள்ள பட்டியலில் ஹர்சவர்தன் முன்னிலையில் உள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com