நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20: தொடரை கைப்பற்றுமா இந்தியா?

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20: தொடரை கைப்பற்றுமா இந்தியா?

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20: தொடரை கைப்பற்றுமா இந்தியா?
Published on

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 இன்று நடைபெறவுள்ளது

இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரில் 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் மூன்றாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இந்தியா உள்ளது. அதேவேளையில் இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய நெருக்கடியில் நியூசிலாந்து அணி உள்ளது.

ஹாமில்ட்டனில் உள்ள செடன் பார்க்கில் இன்று பிற்பகல் இந்த போட்டி தொடங்கவுள்ளது. 2009-ம் ஆண்டு நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை 2-0 என்ற கணக்கிலும், 2019-ல் டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா இழந்தது. இந்நிலையில் இந்தமுறை தொடரைக் கைப்பற்றி சாதனை படைக்கும் முயற்சியில் இந்திய அணி களம் இறங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com