\
இந்தியா -இலங்கை கிரிக்கெட் தொடர்களில் மாற்றம்

இந்தியா -இலங்கை கிரிக்கெட் தொடர்களில் மாற்றம்

இந்தியா -இலங்கை கிரிக்கெட் தொடர்களில் மாற்றம்
Published on: 

இந்தியா இலங்கை அணிகள் இடையேயான டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பிசிசிஐ மாற்றங்களை செய்துள்ளது.

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 இருபது ஓவர் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. முன்னதாக, டெஸ்ட் தொடரை முடித்த பின்னர் இருபது ஓவர் தொடர் தொடங்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் முதலில் இருபது ஓவர் தொடரை முதன்மையாக நடத்த கோரியிருந்தது.

இதனை ஏற்றுக் கொண்ட பிசிசிஐ, இருபது ஓவர் தொடரை முதலில் நடத்த ஒப்புதல் தெரிவித்துள்ளது. இரு அணிகள் இடையேயான 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட டி20 தொடர், வரும் 24 -ம் தேதி தொடங்கி 4 நாள்களில் முடிவடையவுள்ளது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மார்ச் 4 -ம் தேதி தொடங்குகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com