\
ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் : காயம்பட்ட ஆஷ்டன் அகருக்கு மாற்றாக நாதன் லியோன்

ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் : காயம்பட்ட ஆஷ்டன் அகருக்கு மாற்றாக நாதன் லியோன்

ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் : காயம்பட்ட ஆஷ்டன் அகருக்கு மாற்றாக நாதன் லியோன்
Published on

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார் ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் அகர். இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பத்து ஓவர்களை வீசி இரண்டு விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தி இருந்தார்.

இந்நிலையில் அவருக்கு மாற்றாக மற்றொரு சுழற்பந்து வீச்சாளாரான நாதன் லியோன் டி20 அணியில் இடம் பிடித்துள்ளார். இந்தியா நாளை இரண்டாவது டி20 ஆட்டத்தில் விளையாட உள்ளது. அதே போல ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்சுக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்தும் அந்த அணி கவலை கொண்டுள்ளது. வார்னரும் காயத்தினால் டி20 தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில் ஸ்மித் ஆஸ்திரேலியாவை இரண்டாவது டி20 போட்டியில் வழிநடத்துவார் என்ற பேச்சும் எழுந்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com