இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ்-க்கு பி.எம்.டபிள்யூ காரை பரிசாக அளிக்க உள்ளதாக, ஜூனியர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக் குழு தலைவர் சாமுண்டீஸ்வர்நாத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில், கடந்த 17 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டுவரும் மிதாலியை கவுரவிக்கும் வகையில், காரை பரிசாக அளிப்பதாக அவர் கூறியுள்ளார். 34 வயதான மிதாலி ராஜ், மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீராங்கனை. கடந்த 2005ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
கடந்த 2007-ம் ஆண்டு மிதாலிக்கு சாமுண்டி செல்ரோலட் காரை பரிசளித்திருந்தார். இப்போது உலகக்கோப்பைக்கு இந்திய அணியை கொண்டு சென்றதற்காக பிஎம்டபிள்யூ காரை பரிசளிக்கிறார்.
‘இந்திய மகளிர் கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் மிதாலி. இந்திய அணியை அவர் வழிநடத்திய விதம் மறக்க முடியாதது’ என்ற சாமுண்டி, இதற்கு முன் பிவி.சிந்து, சாக்ஷி மாலிக், சாய்னா நேவால், பருப்புள்ளி காஷ்யப் ஆகியோருக்கும் கார்களை பரிசளித்துள்ளார்.