விளையாட்டு
இந்தியா- பாக். போட்டிக்கு இவர்கள்தான் நடுவர்கள்!
இந்தியா- பாக். போட்டிக்கு இவர்கள்தான் நடுவர்கள்!
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பைனலில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பலத்த எதிர்பார்ப்புக்குள்ளான இந்தப் போட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாதான் வெல்லும் என்றும் பாகிஸ்தான் ஜெயிக்கும் என்றும் இரு நாட்டு ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக மோதி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் போட்டிக்கான நடுவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவின் மராய்ஸ் இராஸ்முஸ், இங்கிலாந்தின் ரிச்சர்ட் கெட்டில்பாரா ஆகியோர் மைதானத்துக்குள் நடுவர்களாக இருப்பார்கள். இது இராஸ்முஸுக்கு நடுவராக 71 வது போட்டி. ரிச்சர்டுக்கு 72-வது போட்டி. ஆஸ்திரேலியாவின் ராட் டக்கர் டிவி நடுவராக இருப்பார்.