இந்தியா - பாகிஸ்தான் போட்டி: வழிவிடுவாரா வருண பகவான்?

இந்தியா - பாகிஸ்தான் போட்டி: வழிவிடுவாரா வருண பகவான்?

இந்தியா - பாகிஸ்தான் போட்டி: வழிவிடுவாரா வருண பகவான்?
Published on

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கிரிக்கெட் உலகில் பரமவைரிகளாகக் கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள், ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்குப் பின்னர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மோதவுள்ளன. இந்த போட்டி பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக போட்டி நடைபெறும் எட்ஜ்பாஸ்டனில் நாளை மழை பொழிய 40 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக வெதர்.காம் எனும் தனியார் வானிலை முன்னறிவிப்பு இணையதளம் கணித்துள்ளது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை இரவில் இடியுடன் கூடிய மழை பொழிய வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால், போட்டி முழுமையாக நடைபெற வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது. 

போட்டி நடைபெற உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானப் பகுதியில் மழை பெய்ததால் இந்திய அணி வீரர்கள் உள்விளையாட்டரங்கில் பயிற்சி மேற்கொண்டனர். சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் 2ஆவது போட்டியான ஆஸ்திரேலியா-நியூசிலாந்து போட்டி மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com