கவுருடன் ஒப்பிடாதீர்கள்: கபில்தேவ்

கவுருடன் ஒப்பிடாதீர்கள்: கபில்தேவ்

கவுருடன் ஒப்பிடாதீர்கள்: கபில்தேவ்
Published on

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதன் இறுதி போட்டி நாளை நடக்கிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த அரையிறுதி போட்டியில் 171 ரன்கள் குவித்து அசத்தினார் இந்திய அணியின் ஹர்மன்பிரீத் கவுர். பஞ்சாபை சேர்ந்த இவருக்கு ஏராளமான வாழ்த்துகள் குவிந்தன. குவிந்து வருகின்றன.
இந்நிலையில் 1983-ல் நடந்த உலகக் கோப்பை போட்டியில் கபில்தேவ் 175 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அதையும் கவுரின் சதத்தையும் ஒப்பிட்டு ரவி சாஸ்திரி, கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே உட்பட பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதுபற்றி கபில்தேவ் கூறும்போது, ’கவுர் கொண்டாடப்பட வேண்டியவர். அவரையும் நான் ஆடிய ஆட்டத்தையும் ஒப்பிட வேண்டாம். ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பைனலில் இந்தியா வெல்ல வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com