கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டி தொடரை ரத்து செய்ய வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிரப்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா வீரர்கள் இருவருக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டி தொடரை ரத்து செய்ய வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.