அல்காரஸ், ஜோகோவிச்
அல்காரஸ், ஜோகோவிச்x

கேரியர் கிராண்ட் ஸ்லாம் பட்டம் | ஜோகோவிச்சின் கனவை சிதைத்த அல்காரஸ்.. 22 வயதில் சாதனை!

மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் வென்று, இளம் வயதில் கேரியர் கிராண்ட் ஸ்லாம் பட்டதை வென்றவர் என்ற சாதனையை அல்காரஸ் பெற்றிருக்கிறார்.
Published on

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி இன்று உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ள 22 வயதான அல்காரசுக்கும், 2 ஆம் இடத்தில் உள்ள 38 வயதான ஜோகோவிச்சுக்கும் இடையே நடைபெற்றது. இந்தப்போட்டியில் அல்காரஸ் வென்றால் உலகில் மிக இளம் வயதில் கரியர் ஸ்லாம் (Career Slam) அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை எட்டுவார். இதற்கு முன்னர், 24 வயதில் ரஃபேல் நடால் வென்றதே சாதனையாக இருந்தது. அதேசமயத்தில், ஜோக்கோவிச் வென்றால் 25ஆவது க்ராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று, உலகின் அதிக க்ராண்ட் ஸ்லாம்களை வென்ற ஒரே வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைப்பார் என இருபெரும் சாதனைகள் நடைபெற வாய்ப்பு இந்தப் போட்டி இருந்ததால், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டது.

அல்காரஸ்
அல்காரஸ்x

இந்த நிலையில் தான், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. 3 மணி நேரம் 2 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில், 2-6, 6-2, 6-3, 7-5 என்ற நான்கு செட்களில் ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், கேரியர் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை இளம் வயதில் வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதேசமயம், ஆஸ்திரேலியா ஓபன் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் தோற்றதே கிடையாது என்ற சாதனை நிறைவிற்கு வந்திருக்கிறது.

அல்காரஸ், ஜோகோவிச்
‘சிங்கிள் எடுத்து சொந்த சாதனைக்காக விளையாட மாட்டேன்..’ - இஷான் கிஷன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com