பந்தை எறிந்தாலே அர்ஜூனா விருது கிடைத்து விடுகிறது: கார் பந்தய வீரர் காட்டம்

பந்தை எறிந்தாலே அர்ஜூனா விருது கிடைத்து விடுகிறது: கார் பந்தய வீரர் காட்டம்
பந்தை எறிந்தாலே அர்ஜூனா விருது கிடைத்து விடுகிறது: கார் பந்தய வீரர் காட்டம்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்தை எறிந்து விட்டாலே அர்ஜூனா விருதுகள் கிட்டி விடுகிறது என கார் பந்தய வீரர் கவுரவ் கில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கால்ஃப், கேரம், பில்லியர்ட்ஸ், ஸ்நூக்கர் போன்ற விளையாட்டுகளை அங்கீரிக்கும் அரசு, மோட்டர் பந்தயத்தை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை என்று அவர் கூறியுள்ளார். இதுவரையிலும் மோட்டார் பந்தய வீரர் ஒருவருக்கு கூட அர்ஜூனா விருது வழங்கப்படவில்லை என்று கூறிய அவர், ஒலிம்பிக்கிலேயே இல்லாத கிரிக்கெட் விளையாட்டு‌ மட்டும், அர்ஜூனா விருதுப்பட்டியலில் எப்படி இடம் பிடித்தது? எனக் கேள்வி எழுப்பினார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்தை எடுத்து எறிந்துவிட்டாலே, அர்ஜூனா விருதுகள் கிட்டி விடுகிறது என்றும் அவர் கூறினார். இந்த குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ள கவுரவ் கில், ஆசிய பசிஃபிக் சாகச கார்பந்தயத்தில் இருமுறை சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com