சூட்டிங்கின் போது கார் விபத்து! நூலிழையில் உயிர் தப்பிய இங்கிலாந்து வீரர் பிளின்டாஃப்!

சூட்டிங்கின் போது கார் விபத்து! நூலிழையில் உயிர் தப்பிய இங்கிலாந்து வீரர் பிளின்டாஃப்!
சூட்டிங்கின் போது கார் விபத்து! நூலிழையில் உயிர் தப்பிய இங்கிலாந்து வீரர் பிளின்டாஃப்!

படப்பிடிப்பின் போது கார் விபத்துக்குள்ளானதால் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ பிளின்டாஃப் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பிபிசி-யின் ”டாப் கியர்” என்ற ஷோவில் பங்கேற்று விளையாடிய இவர், பனிக்கட்டி நிலையான டிராக்கில் காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஆல்ரவுண்டருமான ஆண்ட்ரூ பிளின்டாஃப், சர்ரேயில் உள்ள டன்ஸ்ஃபோல்ட் பார்க் ஏரோட்ரோமில், பனிக்கட்டி நிலையில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, விபத்து ஏற்பட்டது. பிபிசி-யின் டாப் கியர் என்ற ஷோவில் பங்கேற்ற இவர், இன்று காலை டாப் கியர் ஷோவின் சோதனைப் பாதையில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த அவரை உடனடியாக விமானம் மூலம்  மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக பிபிசியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிடைத்திருக்கும் தகவலின் படி, ”அவருக்கு ஏற்பட்டிருக்கும் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல, எப்போதும் போல சாதாரணமாகவே பாதையில் ஓட்டினார், எதிர்பாராத வகையில் விபத்து நிகழ்ந்தது, வழக்கமான அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் படப்பிடிப்பிலும் இருந்தன, காயமடைந்த சிறிது நேரத்தில் அவர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார், படப்பிடிப்பு இப்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டிலும், டாப் கியரின் முன்னொரு எபிசோடு படப்பிடிப்பின் போது 125 மைல் வேகத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் ஃபிளின்டாஃப் உயிர்தப்பினார், அவர் விபத்தில் இருந்து விலகிச் செல்லும்போது தன்னை "முற்றிலும் நன்றாக" இருப்பதாக அறிவித்தார்.

அப்போதைய விபத்திற்கு பிறகு அவர் கூறுகையில், "டாப் கியர் டிராக் பந்தயங்களில் நான் சிறப்பாக செயல்படுவேன் என்பதை உறுதிப்படுத்த மிகவும் நான் முயற்சி செய்கிறேன், அதனால் இந்த சந்தர்ப்பத்தில், நான் சில தூரம் சென்றேன். நீங்கள் அதை டிவியில் பார்க்கும்போது தெரிந்திருக்கு, இது கேளியானதை விட மிகவும் ஆபத்தானது” என்று தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com