ரோகித் சர்மா Vs விராட் கோலி.. வாசிம் ஜாஃபருக்கு இவர்தான் சிறந்த கேப்டன்!

ரோகித் சர்மா Vs விராட் கோலி.. வாசிம் ஜாஃபருக்கு இவர்தான் சிறந்த கேப்டன்!
ரோகித் சர்மா Vs விராட் கோலி.. வாசிம் ஜாஃபருக்கு இவர்தான் சிறந்த கேப்டன்!

'சரியான நபர் கையில்தான் கேப்டன் பதவி சென்றுள்ளது' என ரோகித் சர்மாவை புகழ்ந்துள்ளார் வாசிம் ஜாஃபர்.

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. இந்நிலையில் இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக விடை பெற்ற விராட் கோலியை விட வரும் காலங்களில் ரோகித் சர்மா மிகச்சிறந்த டெஸ்ட் கேப்டனாக உருவெடுப்பார் என முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் கணித்துள்ளார்.

இதுபற்றி வாசிம் ஜாஃபர் கூறுகையில், “டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியை விட ரோகித் சர்மா மிகச்சிறந்த கேப்டனாக வர முடியும். போட்டிகளின் முடிவுகளை பார்த்தாலே தெரிகிறது, சரியான நபர் கையில்தான் கேப்டன் பதவி சென்றுள்ளது. ரோகித் சர்மா சிறப்பாக யுத்திகளை கையாள்கிறார்.

இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக ரோகித் சர்மா திகழ்கிறார். இன்னும் எத்தனை டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தலைமை தாங்குவார் என தெரியாது. தொடர்ந்து சொந்த மண்ணில் விளையாட உள்ளோம். இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது கடினமாக இருக்காது'' என்றார்.

இதையும் படிக்க: மாமல்லபுரத்தில் “செஸ் ஒலிம்பியாட் 2022”?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com