இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: இன்று மழை பெய்யாது!
இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகள் இடையில் கேப்டவுனில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் 5-ம் தேதி தொடங்கியது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் பந்து பவுன்சுடன், ஸ்விங்கும் ஆனது. முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 286 ரன்களும், இந்தியா 209 ரன்களும் எடுத்தன. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 93 ரன்கள் விளாசினார்.
இந்நிலையில் நேற்று 3வது நாள் ஆட்டம் நடக்க இருந்தது. ஆனால், மழை தொடர்ந்து பெய்தது. ஒரு பந்து கூட வீசப்படாமல் நேற்றைய ஆட்டம் கைவிடப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போதைய நிலவரப்படி தென்னாப்பிரிக்கா 142 ரன் முன்னிலையில் உள்ளது. போட்டியின் 4வது நாளான இன்று மழை பெய்ய வாய்ப்புகள் குறைவு என வானிலை மையம் தெரிவித்துள்ளது