விளையாட்டு
நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி - உலக சாதனை படைத்தார் கனடா வீராங்கனை
நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி - உலக சாதனை படைத்தார் கனடா வீராங்கனை
உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியின் மகளிர் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில், கனடா வீராங்கனை கைலீ மாஸே தங்கப்பதக்கம் வென்று உலக சாதனை படைத்தார்.
ஐரோப்பியாவின் ஹங்கேரியில் உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், மகளிருக்கான 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் கனடா வீராங்கனை கைலீ மாஸே, 58.10 வினாடிகளில், இலக்கை எட்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம், அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக, பிரிட்டனின் கெம்மா 58.12 வினாடிகளில் உலக சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.