”முழுசா தயாராகாம இந்தியா கூடலாம் விளையாடி ரிஸ்க் எடுக்க முடியாது” - விலகிய நீயூசி வீரர்!

”முழுசா தயாராகாம இந்தியா கூடலாம் விளையாடி ரிஸ்க் எடுக்க முடியாது” - விலகிய நீயூசி வீரர்!

”முழுசா தயாராகாம இந்தியா கூடலாம் விளையாடி ரிஸ்க் எடுக்க முடியாது” - விலகிய நீயூசி வீரர்!
Published on

எதிர்வரும் இந்தியா உடனான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட தான் இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்றும், தயாராகாமல் இந்தியா உடனான தொடரில் விளையாடி ரிஸ்க் எடுக்க முடியாது என்றும் தொடரிலிருந்து விலகியுள்ளார் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்குபெற்று விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் தற்போது விளையாடி வரும் நியூசிலாந்து, ஜனவரி 9ஆம் தேதியிலிருந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதனைத்தொடர்ந்து ஜனவரி 18ஆம் தேதி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நியூசிலாந்து, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான தொடர்களிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே. இந்தியாவுடனான ஹோம் தொடரில் விளையாடி இருந்த ஆடம் மில்னே, தசை பிடிப்பால் ஓய்விலிருந்தார். பின்னர் ஃபயர்பேர்டு அணிக்காக ட்ரீம்11 சூப்பர் ஸ்மாஷ் சீசனில் தாமதமாக திரும்பி வந்து முதல் இரண்டு ஆட்டங்களில் பங்குபெற்று விளையாடி வரும் ஆடம் மில்னே, 16 நாட்களில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளுக்கு எதிராக ஆறு ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடுவது மிகவும் பெரிய ஆபத்தானதாக கருதி விலகியுள்ளார்.

திங்களன்று நடைபெற்ற கலந்துரையாடலில் அணி நிர்வாகத்திடம் பேசியிருக்கும் ஆடம் மில்னே, முழுமையான தயார்படுத்துதல் இல்லாமல், இந்தியா போன்ற ஒரு அணிக்காக விளையாடி அணியை தோல்விக்குள் தள்ள விரும்பவில்லை என்று விலகியுள்ளார்.

இதுகுறித்து பேசியிருக்கும் நியூசிலாந்து தேர்வாளர் கவின் லார்சன், “இந்த முடிவு எளிதானதல்ல, வரும் ஒருநாள் தொடரில் பங்குபெற்று பந்துவீச முடியாதது குறித்து தானாகவே வந்து பேசினார் மில்னே. சுற்றுப்பயணத்தில் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் அணிக்கு தேவையானதை சமாளிக்க, அவர் தயாராகி இருப்பது போதுமானதாக இருக்காது என்ற அவரது கோரிக்கையை நாங்கள் ஒப்புக்கொண்டோம். அணியை வீழ்த்தக்கூடாது என்ற அவரது நேர்மையையும், உண்மையான விருப்பத்தையும் நாங்கள் பாராட்டுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

ஆடம் மில்னேவுக்கான மாற்றுவீரராக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் விளையாடி வரும் டிக்னர் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com