2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி எங்கு நடக்கும்?
2026ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை எந்த நாடு நடத்தப் போகிறது என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படுகிறது.
2026ல் நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியை எங்கு நடத்துவது என்ற வாக்கெடுப்பை இன்று மாஸ்கோவில் உலகக் கோப்பை கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்துகிறது. போட்டியை நடத்த விண்ணப்பித்துள்ள நாடுகள், அவற்றில் உள்ள கட்டமைப்பு வசதிகள், பொருதாளார நிலை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு வாய்ப்பு வழங்கப்படுகிறது. 2026ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியை நடத்த ஆப்பிரிக்க கண்டம் சார்பில் மொராக்கோவும், அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகள் விண்ணப்பித்துள்ளன.
இதற்கிடையே ஐரோப்பா நாடுகள் மொராக்கோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போட்டியை நடத்தும் வாய்ப்பை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் இல்லையேல் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாட்டை தேர்வு செய்யும் வாக்கெடுப்பு இன்று மாஸ்கோவில் நடைபெறுகிறது.