இன்று 2-வது டெஸ்ட்: தாக்குப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?

இன்று 2-வது டெஸ்ட்: தாக்குப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?

இன்று 2-வது டெஸ்ட்: தாக்குப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
Published on

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கிறது. இதை வென்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனிடையே வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இன்று நடைபெறுகிறது. முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீசை மூன்று நாட்களுக்குள் இந்திய அணி சுருட்டியது. இந்த போட்டியும் ஐந்து நாட்கள் வரை நடக்குமா என்பது சந்தேகமே.

(ஹோல்டர்)

இந்திய அணியில், கடந்த போட்டியில் அறிமுக வீரர் பிருத்வி ஷா, கேப்டன் விராத் கோலி, ஜடேஜா ஆகியோர் அபார சதம் அடித்தனர். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், குல்தீப், ஜடேஜா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். துணை கேப்டன் ரஹானே சமீபகாலமாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இருந்தாலும் பேட்டிங், பந்துவீச்சு இரண்டி லும் இந்திய அணி வலுவானதாக இருக்கிறது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவில் விளையாடி அனுபவமில் லாத வீரர்களை கொண்டுள்ளதாலும் முன்னணி வீரர்கள் இல்லாததாலும் பலமில்லாத அணியாகக் காணப்படுகிறது.

முதல் போட்டியில் காயம் காரணமாக களமிறங்காத அந்த அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் இன்றைய போட்டியில்  களமிறங்குகிறார். இதே போல பாட்டி இறந்ததால் சொந்த நாட்டுக்கு திரும்பிய வேகப்பந்துவீச்சாளர் கேமர் ரோச் அணிக்கு திரும்பியுள்ளார். இவர்கள் வரவு அந்த அணிக்கு புது தெம்பை அளிக்கும்.

இந்த போட்டிக்காக அறிவிக்கப்பட்ட 12 பேர் கொண்ட இந்திய அணியில் மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. முந்தைய போட்டியில் ஆடிய வீரர்களே இதிலும் விளையாடுகிறார்கள்.

போட்டி நடக்கும் ஐதராபாத்தில் மைதானத்தில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 3-ல் வெற்றியும், ஒரு போட்டியில் டிராவும் கண்டுள்ளது.

போட்டி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com