விளையாட்டு
புறக்கணிக்கிறார்கள்: பிசிசிஐ மீது பீகார் கிரிக்கெட் சங்கம் குற்றச்சாட்டு
புறக்கணிக்கிறார்கள்: பிசிசிஐ மீது பீகார் கிரிக்கெட் சங்கம் குற்றச்சாட்டு
சில மாநிலங்களை சேர்ந்த கிரிக்கெட் சங்கங்களை பிசிசிஐ புறக்கணிப்பதாக பீகார் கிரிக்கெட் சங்கம் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது.
பீகார், புதுச்சேரி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த பிசிசிஐ அனுமதி வழங்குவதில்லை என அது கூறியுள்ளது. இது தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத்துக்கும் பீகார் கிரிக்கெட் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதத்தில், தற்போது நடந்துவரும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் போட்டிகள் நடைபெறும் நகரங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், அதில் பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களின் நகரங்கள் தொடர்ந்து புறக்கணிப்பது வேதனையளிப்பதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகள் பீகார் மாநிலத்தில் உள்ள விளையாட்டு வீரர்களையும், ரசிகர்களையும் புறக்கணிக்கும் நடவடிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.