சிஏஏ குறித்து உங்கள் கருத்து என்ன? : விராட் கோலி அளித்த பதில்

சிஏஏ குறித்து உங்கள் கருத்து என்ன? : விராட் கோலி அளித்த பதில்

சிஏஏ குறித்து உங்கள் கருத்து என்ன? : விராட் கோலி அளித்த பதில்
Published on

குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து முழுமையான புரிதல் இல்லாமல் பொறுப்பற்ற முறையில் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்கள் முதலில் அசாம் மாநிலத்தில்தான் தொடங்கியது. அசாம் மாநிலத்தில் சிஏஏ மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில், இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபது ஓவர் போட்டி நாளை நடைபெறுகிறது. அசாமில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இப்போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு சில கட்டுப்பாடுகளை அம்மாநில கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளது.

இந்நிலையில், இந்தியா - இலங்கை தொடர் குறித்த செய்தியாளர் சந்திப்பில் கேப்டன் விராட் கோலியிடம் சிஏஏ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் மிகவும் பக்குவத்துடன் பதிலளித்தார். விராட் கோலி பேசிய போது, “இந்த விவகாரத்தை பொறுத்தவரையில், நான் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்ல விரும்பவில்லை. ஒரு விஷயத்தைப் பற்றி கருத்து சொல்ல விரும்பினால், அது குறித்து சாதக, பாதகங்களை தெரிந்திருக்க வேண்டும். சிஏஏ என்றால் என்ன என்பது குறித்து எனக்கு முழுமையான புரிதல் வேண்டும். அப்படி புரிதல் இருந்தால் மட்டுமே என்னால் கருத்து சொல்ல முடியும்” என்றார்.

தேசபக்திக்கு ஆதரவாக விராட் கோலி உணர்வு பொங்க பல நேரங்களில் கருத்து தெரிவித்துள்ளார். பெரும்பாலும் அது இந்திய அணிக்காகவே இருக்கும். இந்திய அணிக்காக ஆதரவளிக்க வேண்டும் என்ற தொனியிலே இருக்கும். இருப்பினும், 2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, இந்திய அரசியல் வரலாற்றில் இது சிறந்த நகர்வு’ என்ற கருத்தினை தெரிவித்து இருந்தார். ஆனால், சிஏஏ குறித்த கேள்விக்கு மிகவும் சாதுர்யமாக பதிலளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com