பந்தை சேதப்படுத்திய விவகாரம்: ஆஸி. கிரிக்கெட் அறிக்கை சொல்வது என்ன?

பந்தை சேதப்படுத்திய விவகாரம்: ஆஸி. கிரிக்கெட் அறிக்கை சொல்வது என்ன?

பந்தை சேதப்படுத்திய விவகாரம்: ஆஸி. கிரிக்கெட் அறிக்கை சொல்வது என்ன?
Published on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட், கேப் டவுனில் நடந்த தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் பந்தை திட்டமிட்டு சேதப்படுத்திய சம்பவம் கிரிக்கெட் உலகை அதிரச் செய்தது. மூத்த வீரர்களின் ஆலோசனைப்படி தான் பந்தின் தன்மையை மாற்ற பேன்கிராஃப்ட் முயன்றதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித்தையும், துணை கேப்டன் பதவியில் இருந்து வார்னரையும் நீக்கி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டது. பின்னர் அவர்களுக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது. பேன்கிராஃப்ட்டுக்கு ஒன்பது மாதம்  தடை விதிக்கப்பட்டுள்ளது.

பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு குழு தென்னாப்பிரிக்கா சென்று விசாரணை நடத்தியது. பின்னர் அந்த அறிக்கையை கிரிக்கெட் வாரியத்திடம் சமர்ப்பித்தது. அதில் கூறியிருப்பதாவது:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் வீரர்களுக்கான நடத்தை விதி பிரிவு 2.3.5-ஐ ஸ்மித், வார்னர், பேன்கிராஃப்ட் ஆகியோர் மீறி இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து ஸ்மித், டேவிட் வார்னருக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஒரு வருட தடையும், பேன்கிராப்ஃடுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்படுகிறது. 

1.விளையாட்டின் உத்வேகத்தை சீர்குலைப்பது, 
2. தங்களுக்குள்ளாகவே அதிகாரபூர்வமான பிரதிநிதி போல் செயல்படுவது,
3. கிரிக்கெட்டின் நலனுக்கு எதிராகவும், அதன் புகழை கெடுக்கும் வகையிலும் நடந்தது.
4. கிரிக்கெட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது ஆகிய நடத்தை விதிகளை மூன்று பேரும் மீறியுள்ளனர்.

 ஸ்மித், பந்தின் தன்மையை திட்டமிட்டு மாற்ற முயற்சித்தது, தவறு நடக்காமல் தடுக்க தவறியது, பேன்கிராஃப்ட் பந்தை தேசப்படுத்திய விஷயத்தில் நடுவர்களுக்கு தவறான தகவல்களை (கருப்புத்துணிதான் வைத்திருந்தேன்) அளித்தது ஆகிய உள்ளிட்ட பிரிவுகளில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கிறார். 

வார்னர், பந்தின் தன்மையை மாற்றுவதற்கான திட்டத்தை உருவாக்கி அதை செயல்படுத்த முயற்சித்தது, இந்த திட்டத்திற்கு இளம் வீரரை பயன்படுத்தியதோடு, பந்தை எப்படி சேதப்படுத்துவது என்ற ஆலோசனைகளை வழங்கியது, தனக்கு தெரிந்த விஷயங்களை தானாக முன்வந்து சொல்லாதது உள்ளிட்ட பிரிவுகளில் குற்றவாளி. பேன்கிராஃப்ட் வேண்டுமென்றே பந்தை சேதப்படுத்த முயற்சித்தது, ஆதாரத்தை மறைக்க முயன்றது உள்ளிட்ட 5 பிரிவுகளில் குற்றம் இழைத்துள்ளார்.

இம்மூவருக்கும் தடை விதிக்கப்பட்டாலும், கிளப் கிரிக்கெட்டில் விளையாட அனுமதி அளிக்கப்படுகிறது. 
அதே நேரம் மஞ்சள் டேப் கொண்டு பந்தை சேதப்படுத்த முயன்றதாகக் கூறப்பட்டாலும் உண்மையில் அது மணல் பதிந்த தாள்தான் என்பதும் தெரியவந்துள்ளது. 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com