"பை" சொன்னது சன் ரைசர்ஸ் ! நாளை டெல்லி - சிஎஸ்கே மோதல்

"பை" சொன்னது சன் ரைசர்ஸ் ! நாளை டெல்லி - சிஎஸ்கே மோதல்
"பை" சொன்னது சன் ரைசர்ஸ் ! நாளை டெல்லி - சிஎஸ்கே மோதல்

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை நேற்று நடந்த போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. இதனையடுத்து நாளை நடைபெறவுள்ள குவாலிபையர் இரண்டாவது போட்டியில் சிஎஸ்கே - டெல்லி இடையே நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றிப் பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியில் கீப்பர் சஹா 8 (9) ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த குப்தில் மற்றும் மணிஷ் பாண்டே ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 36 (19) ரன்களில் குப்தில் அவுட் ஆக, 30 (36) ரன்களில் பாண்டேவும் வெளியேறினார்.

பின்னர் வந்த கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி 28 (27) ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக அதிரடிகாட்டிய விஜய் ஷங்கர் 25 (11) ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதைத்தொடர்ந்து கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் சரிந்தன. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 162 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் கீமோ பவுல் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.   

இதைத் தொடர்ந்து 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணி 19.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 165  ரன் எடுத்து அபாரமாக வென்றது. பிரித்வி ஷா அதிகபட்சமாக 38 பந்துகளில் 56 ரன்களை விளாசினார். டெல்லி அணியின் வெற்றிக்கு அதிகம் உதவியது ரிசப் பன்ட் ஆடிய அதிரடி ஆட்டம்தான். பன்ட் 21 பந்துகளில் 49 ரன்களை விளாசினார். 

முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் மும்பை அணியுடன் தோற்றது சிஎஸ்கே. இதனால் நாளை நடைபெறவுள்ள தகுதிச் சுற்று இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது. இதில் வெற்றிப்பெறும் அணி 12 ஆம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com