\
பாரா பேட்மின்டன்: பகத்- மான்ஷி தங்கப் பதக்கம் 

பாரா பேட்மின்டன்: பகத்- மான்ஷி தங்கப் பதக்கம் 

பாரா பேட்மின்டன்: பகத்- மான்ஷி தங்கப் பதக்கம் 
Published on

பாரா பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பகத் மற்றும் மான்ஷி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். 

சுவட்சர்லாந்தின் பேசில் நகரில் பாரா பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் ஆண்களில் பிரிவில் சிங்கிள்ஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரமோத் பகத் இங்கிலாந்தின் பெத்தலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். அத்துடன் இவர் இரட்டையர் பிரிவில் மனோஜ் சர்க்காருடன் சேர்ந்து தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 

இதேபோல பெண்கள் பிரிவு பாரா பேட்மின்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் மான்ஷி ஜோஷி மற்றொரு இந்திய வீராங்கனையான பார்மாரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். இவர் கடந்த 2011ஆம் நடைபெற்ற விபத்தில் தனது காலை இழந்துள்ளார். அதன்பின்னர் பாரா பேட்மின்டன் பிரிவில் பங்கேற்று வருகிறார். இந்தச் சூழலில் இவர் முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஏற்கெனவே மகளிர் பிரிவு பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com