’புகழ்ச்சியை பெருசா எடுத்துக்கறதில்ல’’: பும்ரா
புகழ்ச்சியையோ, விமர்சனத்தையோ பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தெரிவித்தார்.
இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில், லீக் சுற்று போட்டிகள் முடிந்து அரையிறுதி போட்டிகள் நடக்க இருக்கின்றன. அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் முன்னேறியுள்ளன. நாளை நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அடுத்த அரையிறுதியில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான போட்டியின்போது, வேகமாக 100 விக்கெட்டுகளை சாய்த்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்தார். 57 போட்டியில் விளைாடி இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். முகமது ஷமி, 56 பேட்டிகளில் 100 விக்கெட்கள் வீழ்த்தியதே இந்திய பந்துவீச்சாளர்களின் சாதனையாக இருக்கிறது.
இதுபற்றி பும்ரா கூறும்போது, ’’இந்திய அணியில் அனைவரும் சிறப்பாக விளையாடும்போது, அது நல்ல தலைவலியாகவே இருக்கும். அடுத்து அரையிறுதியில் விளையாட இருக்கிறோம். என்னை புகழ்வதையோ, விமர்சிப்பதையோ தீவிரமாக எடுத் துக் கொள்வதில்லை. வழக்கம்போல என ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். இந்த தொடரில் ஹர்திக் பாண்ட்யா விக்கெட் வீழ்த்துகிறார். ஷமி, விக்கெட் எடுக்கிறார். நானும் விக்கெட்டுகளை சாய்க்கிறேன். இந்த பாசிட்டிவான விஷயங் களும், கூட்டு முயற்சியும் அணியை அடுத்தக் கட்டத்துக்கு முன்னேற்றியுள்ளன’’ என்றார்.

