டி20 தரவரிசையில் 33வது இடம்! டாப்பில் இருந்த பும்ராவுக்கு இப்போது என்னதான் ஆச்சு!

டி20 தரவரிசையில் 33வது இடம்! டாப்பில் இருந்த பும்ராவுக்கு இப்போது என்னதான் ஆச்சு!
டி20 தரவரிசையில் 33வது இடம்! டாப்பில் இருந்த பும்ராவுக்கு இப்போது என்னதான் ஆச்சு!

இந்திய நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா தொடர்ந்து சர்வதேச ரேங்கிங்கில் சரிவை சந்தித்து வருகிறார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக முதன்முதலில் பங்குபெற்று ஆடினார். அவருடைய அபார பந்துவீச்சின் திறமையாலும் நுணுக்கமான ஏர்க்கர் பந்துவீசும் திறமையாலும் தனித்துவமான அடையாளம் பெற்ற பும்ரா இந்திய அணியில் நீக்கமுடியாத இடத்தை பெற்றார். தொடர்ந்து நல்ல பார்மில் ஜொலித்த பும்ரா விரைவாகவே ஐசிசியின் தரவரிசைப் பட்டியலான சர்வதேச பந்துவீச்சாளர் தரவரிசையில் ஒடிஐ மற்றும் டி20 ரேங்கிங்கில் முதலிடம் பிடித்து அசத்தினார்.

இந்நிலையில் இவரால் சார்ட் ஃபார்மேட்களான ஒடிஐ மற்றும் டி20 வடிவங்களில் மட்டும் தான் சிறப்பாக செயல் பட முடியும் மற்றும் இந்திய ஆடுகளங்களில் மட்டும் தான் சிறப்பாக ஜொலிக்க முடியும் எனவும், கிரிக்கெட்டின் சிறந்த வடிவமாக பார்க்கப்படும் டெஸ்ட் ஃபார்மேட்டிலும் மற்றும் வெளிநாட்டு ஆடுகளங்களிலும் ஜொலிக்க முடியாது என்று பல கிரிக்கெட் வல்லுநர்களாலும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களாலும் விமர்சனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் 2018ஆம் ஆண்டு இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டது. அதில் முதன்முதலாக டெஸ்ட் போட்டியில் பும்ரா இந்திய அணிக்காக பங்கேற்று விளையாடினார். கேப்டவுனில் கலந்துகொண்ட முதல் போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகளை எடுத்து அசத்திய பும்ரா, வெளிநாட்டு மண்ணிலும் டெஸ்ட் ஃபார்மேட்களிலும் சிறப்பாக செயல்பட முடியாது என்று அவர்மீது வைக்கப்பட்ட அனைவரது விமர்சனத்திற்கும் பதிலடி கொடுத்தார். கேப்டவுனில் நடந்த அந்த போட்டியில் 18.5 ஓவர்களில் 54 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை பெற்றார்.

தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜஸ்பிரிட் பும்ரா வெளிநாட்டு தொடர்களில் இங்கிலாந்து (5/85), தென்னாப்பிரிக்கா (5/54), ஆஸ்திரேலியா (6/33), வெஸ்ட் இண்டிஸ் ( 5/7 & 6/27 ) என ஐந்து முறை உலகின் சிறந்த அணிகளுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை எடுத்தி அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இதுவரை பிடிக்காத உயர்ந்த இடமான மூன்றாவது இடத்திற்கு முன்னேறி அசத்தினார்.

இதுவரை இந்திய அணிக்காக ஆடிய வேகப்பந்துவீச்சாளர்களில் கபில் தேவிற்கு பிறகு ஒடிஐ போட்டிகளில் முதல் இடத்தையும், டெஸ்ட் தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தையும் பெற்று இந்திய அணியில் அசைக்கமுடியாத ஒருவரானார்.

தொடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பும்ரா தற்போது அதிகமாக போட்டிகளில் ஆடாததாலும், விக்கெட்டுகள் இல்லாத போட்டிகளாலும் தொடர்ந்து தரவரிசை பட்டியலில் சரிவை பார்த்து வருகிறார் பும்ரா.

ஐசிசி தற்போது வெளியிட்டுள்ள பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் டெஸ்ட் போட்டிகளுக்கான பிரிவில் ஒரு இடம் பின் தங்கி 5ஆவது இடத்திற்கு வந்திருக்கிறார். மேலும் ஒடிஐ பிரிவில் இரண்டு இடங்கள் பின்தங்கி 4ஆவது இடத்தில் இருக்கிறார். மேலும் முன்பு டி20 பிரிவில் முதல் இடத்தில் இருந்த பும்ரா 33ஆவது இடத்தில் எங்கேயோ இருக்கிறார்.

பும்ராவின் இந்த நிலை இந்திய ரசிகர்களிடையே தற்போது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com