\
எல்லை தாண்டிய பும்ராவுக்கு 2 வது இடம்!

எல்லை தாண்டிய பும்ராவுக்கு 2 வது இடம்!

எல்லை தாண்டிய பும்ராவுக்கு 2 வது இடம்!
Published on: 

இருபது ஒவர் கிரிக்கெட் வீரர்களுக்கான பந்து வீச்சு தரவரிசைப் பட்டியலில், இந்திய வீரர் பும்ரா இரண்டாவது இடத்தில் உள்ளார். 

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் பும்ரா வீசிய நோபாலில் அவுட் கண்டத்திலிருந்து தப்பிப் பிழைத்த ஃபகர் ஜமன், சதமடித்தார். பும்ரா வீசிய நோபாலே இந்தியா அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்ததாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் இருபது ஒவர் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்த புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. முதலிடத்தில் இருந்த தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் 3-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். அவருக்கு பதிலாக பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிம் முதலிடத்திலும் பும்ரா 2வது இடத்திலும் உள்ளனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com