பும்ரா சமன் செய்த சாதனை: யாருடையது என தெரியுமா?

பும்ரா சமன் செய்த சாதனை: யாருடையது என தெரியுமா?

பும்ரா சமன் செய்த சாதனை: யாருடையது என தெரியுமா?
Published on

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், கபில்தேவின் நெடுநாள் சாதனையை சமன் செய்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா.

இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 252 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி துவக்கம் முதலே தடுமாறியது. அந்த அணியின் வீரர்கள் ஒவ்வொருவராக ஆட்டமிழந்து பெவிலியனுக்கு அணிவகுப்பு நடத்த துவங்கினர். இந்திய அணி தரப்பில் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா மிகவும் சிறப்பாக செயல்பட்டார். 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் பேட்டிங் வலுப்பெறாமல் தடுத்தார் பும்ரா. இதனால் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை அணி. இதனால் முதல் இன்னிங்சில் 143 ரன்கள் முன்னிலை பெற்றது இந்திய அணி.

29 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ள பும்ரா 8வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.மேலும், சொந்த மண்ணில் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் பும்ரா புகழ்பெற்ற கபில் தேவின் நெடுநாள் டெஸ்ட் சாதனையை சமன் செய்தார். முன்னதாக தனது 29வது டெஸ்ட் போட்டியில் விளையாடும்போது 8 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் கபில் தேவ். அவரது அந்த சாதனையை இன்று சமன்செய்துள்ளார் பும்ரா. வெறும் 24 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் பும்ரா. இது பும்ராவின் மிகச்சிறந்த பந்துவீச்சில் ஒன்றாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com