ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் கோலியும் பும்ராவும் முதலிடம்

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் கோலியும் பும்ராவும் முதலிடம்

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் கோலியும் பும்ராவும் முதலிடம்
Published on

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரநிலைப்பட்டியலில் இந்திய அணி வீரர்கள் கோலியும், பும்ராவும் இடம்பிடித்துள்ளனர்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரநிலைப்பட்டியலில் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் இந்திய அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். அதன்படி பேட்ஸ்மேன்களில் விராட் கோலியும், பந்து வீச்சாளர்களில் பும்ராவும், முதலிடத்தில் தொடர்கின்றனர். பேட்டிங்கில் 884 தர மதிப்பீட்டு புள்ளிகளுடன் விராட் கோலி முதலிடத்திலும், 842 புள்ளிகளுடன் ரோகித் ஷர்மா இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மூன்றாவது இடத்தில் இங்கிலாத்தின் ஜோ ரூட்டும், ஆஸ்திரேலியாவின் வார்னர் நான்காவது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் ஷிகர் தவான் 5 இடத்தில் உள்ளார்.

பந்துவீச்சாளர்களில் 797 புள்ளிகளுடன் பும்ரா முதலிடத்திலும், 788 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். குல்தீப் யாதவ் பந்துவீச்சாளர்களுக்கான தரநிலையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

ஆல் ரவுண்டர்களில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பிடிக்கவில்லை. முதலிடத்தில் ஆப்கானிஸ்தானின் ரஷித்கானும், இரண்டாவது இடத்தில் வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹாசனும், மூன்றாவது இடத்தில் ஆப்கானிஸ்தானின் முகமது நபியும் இடம்பிடித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com