கடைசி டி20: பும்ரா, குல்தீப், உமேஷூக்கு ரெஸ்ட்!

கடைசி டி20: பும்ரா, குல்தீப், உமேஷூக்கு ரெஸ்ட்!

கடைசி டி20: பும்ரா, குல்தீப், உமேஷூக்கு ரெஸ்ட்!
Published on

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பும்ரா, குல்தீப், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு   ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்று இந்தத் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில் கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

லக்னோவில் கடந்த 6 ஆம் தேதி நடந்த 2வது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியில் ரோகித் சர்மா அபார சதம் அடித்தார். இந்தப் போட்டி முடிந்ததும் வீரர்கள் தீபாவளி கொண்டாட்டத்துக்காக தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

வெஸ்ட்இண்டீஸ் அணியினர் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து சேர்ந்தனர். சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று மாலை பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். இந்திய அணி வீரர்கள் நாளை சென்னை வருகிறார்கள்.

இந்நிலையில் இந்தப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சாளர் சித்தார்த் கவுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

அணி விவரம்:
ரோகித் சர்மா (கேப்டன்), தவான், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மணீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பன்ட், குணால் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், சேஹல், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது, நதீம், சித்தார்த் கவுல். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com