அடுத்த உசைன் போல்ட்... 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புதிய சாதனை படைத்த 14 வயது வீரர்!

பிரிட்டிஷ் தடகள வீரர் டிவைன் இஹேம் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டதுடன், புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
டிவைன் இஹேம்
டிவைன் இஹேம்எக்ஸ் தளம்
Published on

இங்கிலாந்தில் உள்ள லீ வேலி தடகள மையத்தில் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 14 வயதான நைஜீரியாவில் பிறந்த பிரிட்டிஷ் தடகள வீரர் டிவைன் இஹேம் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டதுடன், புதிய உலக சாதனை படைத்துள்ளார். அவர் 10.30 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் ஜமைக்காவின் சச்சின் டென்னிஸ் 10.51 வினாடிகளில் கடந்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள ஐஹேம் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

மேலும் அவர், 18 வயதுக்குட்பட்ட ஐரோப்பிய வீரர்களின் அனைத்து வகையான தடகள பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இதற்கு முன்பு, பிரிட்டனின் டெடி வில்சன் (10.26), பிரான்ஸின் ஜெஃப் எரியஸ் (10.27) ஆகியோர் மட்டுமே இலக்கை வேகமாகக் கடந்திருந்தனர்.

இதையடுத்து ஐஹேம் வேகம் பிரபல ஓட்டப்பந்தய ஜாம்பவான் வீரரான உசைன் போல்ட்டை நினைவுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக பலரும் கூறுகின்றனர். மேலும் இதேபோல் பயிற்சி மேற்கொண்டு அசத்தும் பட்சத்தில் 100 மீட்டர் ஓட்டத்தை வெறும் 9.58 வினாடிகளில் முடித்த உசைன் போல்ட்டின் உலக சாதனையை அவர் முறியடிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ”என்னை தகுதிநீக்கம் செய்யும் அதிகாரம் யுபிஎஸ்சிக்கு கிடையாது” - பூஜா கேட்கர்

டிவைன் இஹேம்
உசைன் போல்ட்-க்கே இந்த நிலைமையா? துணிவு பட பாணியில் பறிபோனதா ரூ.103 கோடி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com