விளையாட்டு
சாம்பியன்ஸ் கோப்பையை யார் வெல்வார்? லாரா கணிப்பு!
சாம்பியன்ஸ் கோப்பையை யார் வெல்வார்? லாரா கணிப்பு!
இந்த வருட சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று நம்புவதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் லாரா கூறினார்.
இங்கிலாந்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேலும் கூறியதாவது:
முந்தைய போட்டிகளை விட இது பெரியது. இதனால் ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். என்னைப் போன்ற முன்னாள் வீரர்களுக்கு யார் கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்கிற ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இப்போதைய நிலைமையை பார்க்கும்போது இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றும் என நினைக்கிறேன். இப்போதைய இங்கிலாந்து அணியில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் சமபலத்துடன் திகழ்கிறது. அனைவருமே சிறப்பான வீரர்களாக இருக்கிறார்கள்.
இவ்வாறு லாரா கூறினார்.