\
பிரையன் லாராவுக்கு நெஞ்சு வலி - மருத்துவமனையில் அனுமதி  

பிரையன் லாராவுக்கு நெஞ்சு வலி - மருத்துவமனையில் அனுமதி  

பிரையன் லாராவுக்கு நெஞ்சு வலி - மருத்துவமனையில் அனுமதி  
Published on

நெஞ்சு வலி காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நடப்பு உலகக் கோப்பை தொடரின் நிகழ்ச்சி மற்றும் வர்ணனைக்காக பிரையன் லாரா இந்தியாவில் உள்ளார். இவர் உலகக் கோப்பை தொடர் சம்பந்தமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதற்காக பிரையன் லாரா மும்பையில் தங்கியுள்ளார். 

இந்நிலையில் நெஞ்சு வலி காரணமாக பிரையன் லாரா மும்பையிலுள்ள குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து லாராவின் உடல் நிலை குறித்து மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மருத்துவ வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவலின்படி லாராவிற்கு ஆஞ்சியோகிராஃபி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடிய பிரையன் லாரா டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 400 ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். அத்துடன் மொத்தமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 11,953 ரன்களும், ஒருநாள் போட்டியில் 10,405 ரன்களும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com