’வொயிட்வாஷ்’ ஆன ஆஸி: த்ரில் வெற்றியில் இங்கிலாந்து!

’வொயிட்வாஷ்’ ஆன ஆஸி: த்ரில் வெற்றியில் இங்கிலாந்து!
’வொயிட்வாஷ்’ ஆன ஆஸி: த்ரில் வெற்றியில் இங்கிலாந்து!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றி ஆஸ்திரேலியை அணியை வொயிட்வாஷ் செய்தது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, கடைசி ஒரு நாள் போட்டியில் நேற்று விளையாடியது. மான்செஸ்டரில் நடந்த இந்தப் போட் டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய வீரர்கள் அதிரடி காட்டினர். ஆனால் அவசரமாக ஆடி விக்கெட்டுகளை மளமளவென இழந்தனர். அந்த அணி, 34.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 56 ரன்கள் சேர்த்தார். அலெக்ஸ் கேரி 44 ரன்களும் டிஆர்ஸி ஷார்ட் 47 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலி 4 விக்கெட்டுகளையும் சாம் குரன் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியும் தடுமாறத் தொடங்கியது. முந்தைய போட்டிகளில் அதிரடி காட்டிய ஜேசன் ராய் ஒரு ரன்னிலும் பேர்ஸ் டோவ் 12 ரன்களிலும் ஹேல்ஸ் 20 ரன்களிலும் ரூட் ஒரு ரன்னிலும் கேப்டன் மோர்கன் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆக, ஆஸ் திரேலிய அணிக்கு உற்சாகம் பிறந்தது. ஒரு கட்டத்தில் 114 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது இங்கிலாந்து. இதனால் இந்த ஒரு போட்டியையாவது வென்று விடலாம் என்று நினைத்தது ஆஸ்திரேலியா. ஆனால் அந்த அணியின் ஆசையில் மண்ணை அள்ளிப் போட் டார் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர். அவரும் ரஷித்தும் பொறுமையாக ஆடி, அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர். இந்த ஜோடி 9 வது விக் கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

(ஜோஸ் பட்லர்)

46-வது ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே மிச்சமிருந்த நிலையில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் பர பரப்பு தொற்றிக்கொண்டது. ஆனால் 48.3 ஓவர்களில் 208 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது இங்கிலாந்து! ஜோஸ் பட்லர் 110 ரன்களுடன் களத்தில் இருந்தார். இது அவருக்கு 6-வது சதம்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்துக்கு பூஜ்யம் என்ற கணக்கில் தொடரை வென்றது இங்கிலாந்து அணி. ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து, ‘வொயிட் வாஷ்’ செய்வது இது 2வது முறை. ஏற்கனவே 2001 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயை இவ்வாறு தோற்கடித்து இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com