கல்யாணத்தை நிறுத்திடுங்க டேனி: ஸ்டீவ் ஸ்மித் காதலிக்கு ஆன்லைன் அட்வைஸ்!

கல்யாணத்தை நிறுத்திடுங்க டேனி: ஸ்டீவ் ஸ்மித் காதலிக்கு ஆன்லைன் அட்வைஸ்!
கல்யாணத்தை நிறுத்திடுங்க டேனி: ஸ்டீவ் ஸ்மித் காதலிக்கு ஆன்லைன் அட்வைஸ்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்துடன் நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்திவிடுங்கள் என அவர் வருங்கால மனைவிக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் பந்தை திட்டமிட்டு சேதப் படுத்திய சம்பவம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. மூத்த வீரர்களின் ஆலோசனைப்படிதான் பந்தின் தன்மையை மாற்ற பேன்கிராஃப்ட் முயன்றதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கேப்டன் பதவி யில் இருந்து ஸ்மித்தையும், துணை கேப்டன் பதவியில் இருந்து வார்னரையும் நீக்கி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நட வடிக்கை மேற்கொண்டது. பின்னர் அவர்களுக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது. பேன்கிராஃப்ட்டுக்கு ஒன்பது மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மூவரும் கண்ணீர் பேட்டி அளித்து, மன்னிப்பு கேட்டுள்ளனர்.

இந்நிலையில் ஸ்மித், அவர் காதலி டேனி வில்ஸ்-சை இந்த வருடம் செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக் கிறார். பந்தை சேதப்படுத்திய பிரச்னை காரணமாக, டேனி வில்ஸ்-க்கு ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் கோபத்தில் அட் வைஸ் செய்துள்ளனர். அதில், ‘ஸ்மித் ஒரு மோசடி பேர்வழி. அவருடனான திருமணத்தை நிறுத்திவிடுங்கள்’ என்று பல ரசிகர்கள் கூறியுள்ளனர். 

இன்னொருவர், ‘சட்டம் படித்தவர் நீங்கள். உங்களுக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். 

‘நீங்கள் வழக்கறிஞராக இருப்பதால் உங்கள் கணவரைதான் நியாயப்படுத்துவீர்கள், அவருக்கு ஆதரவாகத்தான் இருப்பீர்கள்’ என்று கூறியுள்ளார். 

‘இந்த போலியான நபரிடம் இருந்து நீங்கள் விலகிவிட முடியுமா?’ என்று மற்றொரு ரசிகரும், ‘ஸ்மித்தான் மோசடி செய்தார். அதற்கு ஏன் டேனியை ரசிகர்கள் தொந்தரவு செய்ய வேண்டும்’ என்று அவருக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்த கார சார கருத்துகளால் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், எதற்கும் பதிலளிக்கவில்லை டேனி வில்ஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com