\
இந்தியாவில் விளையாடும் பிரேசிலின் இளம் கால்பந்து வீரர்

இந்தியாவில் விளையாடும் பிரேசிலின் இளம் கால்பந்து வீரர்

இந்தியாவில் விளையாடும் பிரேசிலின் இளம் கால்பந்து வீரர்
Published on

பிரேசிலைச் சேர்ந்த புகழ்பெற்ற இளம் கால்பந்து வீரர் வினிகஸ் ஜூனியர், இந்தியாவில் நடைபெறும் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் விளையாட உள்ளார்.

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிபா) சார்பில் 17 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற உள்ளது. அக்டோபர் 6-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன.

16 வயது ஆட்டக்காரரான வினிகஸ் ஜூனியரின் துடிப்பான ஆட்டம் சர்வதேச ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. அவரது திறமை கருதி ஸ்பெயினை சேர்ந்த ரியல் மேட்ரிட் கிளப் அணி அவரை அதிகத் தொகைக்கு அண்மையில் ஒப்பந்தம் செய்தது. இந்த நிலையில் முதன்முறையாக உலகக்கோப்பை போட்டியில் வினிகஸ் களமிறங்க உள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com