Neymarweb
விளையாட்டு
பிரேசில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. லீக் போட்டிகளில் இருந்து நெய்மர் விலகல்?
மொராக்கோ, ஹைட்டி, ஸ்காட்லாந்து லீக் போட்டிகளில் நெய்மர் இல்லாமல் களம் இறங்க இருக்கிறது பிரேசில்.
உலகக்கோப்பைத் தொடரின் லீக் போட்டிகள் முழுவதையும் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் தவறவிட அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் சாண்டோஸ் அணிக்காக விளையாடியபோது அவருக்கு ஏற்பட்ட தசைநார் காயம் இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை.
Neymarweb
இதனால் மொராக்கோவுக்கு எதிரான முதல் போட்டியைத் தொடர்ந்து, ஜூன் 19இல் ஹைட்டி மற்றும் ஜூன் 24இல் ஸ்காட்லாந்துக்கு எதிரான லீக் போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. அவசரப்பட்டு களம் இறங்கினால் காயம் தீவிரமடையும் என்பதால், பிரேசில் நாக்- அவுட் சுற்றுக்குத் தகுதிபெறும்போது அவரை முழு உடற்தகுதியுடன் களமிறக்க பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி மற்றும் மருத்துவக் குழு திட்டமிட்டுள்ளது.

