கோலியிடம் மன்னிப்பு கோரினார் ஆஸி. முன்னாள் வீரர்

கோலியிடம் மன்னிப்பு கோரினார் ஆஸி. முன்னாள் வீரர்
கோலியிடம் மன்னிப்பு கோரினார் ஆஸி. முன்னாள் வீரர்

விராத் கோலி குறித்த விமர்சனத்துக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாட்ஜ் மன்னிப்புக் கோரியுள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில், ’நாட்டுக்காக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பது எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெரியும். எனது முந்தைய விமர்சனங்களுக்காக இந்திய மக்களிடமும், இந்திய கிரிக்கெட் அணியிடமும் குறிப்பாக, விராத் கோலியிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கில் நான் கருத்துத் தெரிவிக்கவில்லை’ என்று பிராட் ஹாட்ஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலானத் தொடரை வெல்வது யார் என்ற முக்கியமான போட்டியில் இருந்து காயம் காரணமாக, விராத் கோலி விலகினார். ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காகவே விராத் கோலி அந்தப் போட்டியில் விளையாடுவதைத் தவிர்த்திருக்கலாம் என்று ஹாட்ஜ் விமர்சனம் செய்திருந்தார். ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் குஜராத் லயன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் ஹாட்ஜ் பணியாற்றி வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com