\
ஜெப்ஃரி பாய்காட்டுக்கு ஆபரேஷன்: 3 வது டெஸ்ட் போட்டிக்கு வருகிறார்!

ஜெப்ஃரி பாய்காட்டுக்கு ஆபரேஷன்: 3 வது டெஸ்ட் போட்டிக்கு வருகிறார்!

ஜெப்ஃரி பாய்காட்டுக்கு ஆபரேஷன்: 3 வது டெஸ்ட் போட்டிக்கு வருகிறார்!
Published on: 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஜெப்ஃரி பாய்காட்டுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் நலமாக இருப்பதாக மகள் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெப்ஃரி பாய்காட். 77 வயதான இவர், இப்போது கிரிக்கெட் வர்ணனையாளராக செயல் படுகிறார். தனித்துவமான வர்ணனையின் மூலம் ஏராளமான ரசிகர்களையும் கொண்டுள்ள இவருக்கு கடந்த ஜூன் 27 ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதை அவர் மகள் எம்மா தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர், ‘என் தந்தைக்கு இதய ஆபரேஷன் நடந்துள்ளது. 10 நாட்களாக லீட்ஸில் உள்ள மருத்துவமனையில் இருந்தார். இப்போது நலமாக இருக்கும் அவர் வீட்டுக்கு திரும்பியுள்ளார். இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு போட்டி களில் அவரால் வர்ணனை செய்ய இயலாது. நாட்டிங்காமில் நடக்கும் மூன்றாவது போட்டியில் அவர் கலந்துகொள்ள வாய்ப்பிருக் கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com