ஊதிய பிரச்னை: வங்கதேச தொடரை புறக்கணிக்கும் ஆஸி. வீரர்கள்?

ஊதிய பிரச்னை: வங்கதேச தொடரை புறக்கணிக்கும் ஆஸி. வீரர்கள்?

ஊதிய பிரச்னை: வங்கதேச தொடரை புறக்கணிக்கும் ஆஸி. வீரர்கள்?
Published on

ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக கிரிக்கெட் வாரியத்துடனான பிரச்னை முடிவுக்கு வந்தால் மட்டுமே அடுத்த மாதம் நடைபெற உள்ள வங்கதேச தொடரில் பங்கேற்க முடியும் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்கள் இடையிலான ஊதிய ஒப்பந்தம் கடந்த ஜூன் 30ல் முடிவடைந்த பின்னரும், அந்த ஒப்பந்தம் இதுவரை புதுப்பிக்கப்படவில்லை. இதுதொடர்பாக இருதரப்பினர் இடையே ஒருமித்த கருத்து இதுவரை எட்டப்படவில்லை. இந்தநிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைமை நிர்வாகி அலெஸ்டர் நிகோல்சனுடன் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் துணைக் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

சிறப்பு ஊதிய ஒப்பந்தம் ஒன்றின் மூலம் வங்கதேச தொடரில் பங்கேற்பதா என்பது குறித்து அந்த சந்திப்பின் போது ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பிரச்னை முடிவுக்கு வராமல் வங்கதேச தொடருக்கு புறப்பட்டுச் செல்வதில்லை என்று ஸ்மித் மற்றும் வார்னர் தரப்பில் உறுதியாகச் சொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இது தொடர்பாக முடிவெடுக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் அடுத்த மாதம் 10ஆம் தேதி கூடுகிறது. வங்கதேச அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 20ல் தொடங்குகிறது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com