"வெற்றியை பந்துவீச்சாளர்களே தீர்மானிப்பார்கள்": இந்தியா - ஆஸ்திரேலியா குறித்து ஜாகீர் கான்

"வெற்றியை பந்துவீச்சாளர்களே தீர்மானிப்பார்கள்": இந்தியா - ஆஸ்திரேலியா குறித்து ஜாகீர் கான்
"வெற்றியை பந்துவீச்சாளர்களே தீர்மானிப்பார்கள்": இந்தியா - ஆஸ்திரேலியா குறித்து ஜாகீர் கான்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடரில் பந்துவீச்சாளா்களே வெற்றியைத் தீா்மானிப்பார்கள் என முன்னாள் கிரிக்கெட்  வீரர் ஜாகீா் கான் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரை முடித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர். அதற்காக அவர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வருகிற 27-ம் தேதி சிட்னியில் நடக்கிறது.

இது குறித்து ஜாகீர் கான் கூறும்போது "ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் எப்போதுமே வேகப்பந்து வீச்சுக்கு உகந்ததாகவே இருக்கும். அதனால் ஒரு நாள் கிரிக்கெட் தொடர், டி20 தொடர், டெஸ்ட் தொடர் என அனைத்திலும் பந்துவீச்சாளா்களே வெற்றியை தீா்மானிக்கக் கூடியவா்களாக இருப்பார்கள். 2018-19 இல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. ஆனால், அப்போது முன்னணி வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் தடை காரணமாக விளையாடவில்லை. ஆனால், இந்த முறை அவா்கள் இருவரும் அணிக்குத் திரும்பிவிட்டதால் இந்திய அணிக்கு இந்தத் தொடா் சவால் நிறைந்ததாக இருக்கும்" என்றார்.

மேலும் "இப்போதைய நிலையில் தொடரை எந்த அணி வெல்லும் என்பதை சொல்ல முடியாது. இரு அணிகளிலுமே வலுவான பேட்ஸ்மேன்கள், வலுவான பந்துவீச்சாளா்கள் இருப்பதால், இந்தத் தொடர் விறுவிறுப்பானதாக இருக்கும்" என தெரிவித்துள்ளார் ஜாகீர் கான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com